வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை? CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!
madurai AIIMs issue DMK MK Stalin BJP Annamalai
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் டுத்துள்ள செய்திக்குறிப்பில், "மதுரைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் #AIIMS என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.
அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன" என்று விமர்சித்தி இருந்தார்.
இந்நிலையில், இதற்க்கு பதிலடி கொடுத்து பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது வரும் 2026 ஆம் ஆண்டு முதற் கட்ட பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நமது மத்திய அரசு பலமுறை உறுதியளித்தும், திமுக தலைவர்கள் மக்களிடையே தொடர்ந்து தவறான பொய் பரப்புரைகளைப் பரப்புவது ஏற்புடையதல்ல.
மதுரை எய்ம்ஸ் கட்டிடப்பணிகள் குறித்த காணொளியை இந்தப் பதிவுடன் இணைத்துள்ளதோடு, மாண்புமிகு முதல்வர் விரும்பினால் அவரை நேரில் அழைத்து சென்று காண்பிக்கவும் தயாராக உள்ளேன். ஆகவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் மூலம் தமிழக மக்களைக் குழப்பி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை திமுக-வினர் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதேபோல் பாஜக அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளைச் சென்று பார்வையிட்டிருந்தால், பணிகள் எவ்வளவு நிறைவு பெற்றிருக்கிறது என்பது தெரிந்திருக்கும்.
தனது மாநிலத்தில் நிறைவேற்றப்படும் ஒரு முக்கியமான திட்டத்தைச் சென்று பார்வையிடுவதை விட, முதலமைச்சருக்கும், அவரது மகனுக்கும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் நடனத்தை ரசிப்பதற்குத்தான் நேரமிருக்கிறது என்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு.
மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதலமைச்சருக்கு சந்தேகம் தேவையில்லை. ஏனென்றால், அது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் வாக்குறுதி.
ஆனால், முதலமைச்சருக்கு, தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? இதே மதுரையில், வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதாக சொல்லி, ஆண்டுகள் நான்கு ஆகின்றன. ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. முதல் செங்கலை நாங்கள் தருகிறோம். எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள் என்று கூற முதலமைச்சருக்குத் திராணி இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
madurai AIIMs issue DMK MK Stalin BJP Annamalai