ஆட்சியை தக்கவைக்க 8 சீட் தேவை.! உச்சகட்ட பதற்றத்தில் பாஜக - காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


இன்று பிஹார், மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் நாட்டு மக்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 28-ந் தேதி, கடந்த 3-ந் தேதி, 7-ந் தேதி என 3 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலோடு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பீகார் மாநிலத்தின் சட்டமன்ற பொது தேர்தல் போலவே, மினி சட்டமன்ற தேர்தல் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. காங்கிரசை இருந்து ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து விலகியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அம்மாநிலத்தில் அமைந்தது.

ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து விலகியதால் 28 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற்றால்தான், சிவராஜ் சிங் சவுகானின் பாஜக  ஆட்சி தொடரும்.

எனவே இந்த தேர்தல் ஒரு மினி சட்டமன்ற பொது தேர்தல் என்று சொல்லப்படுகிறது. இந்த தேர்தலின் முடிகளை எதிர்பார்த்து பாஜக - காங்கிரஸ் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madhya pradesh and bihar election resuls today


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->