எல்.கே சுதீஷ் உடைத்த உண்மை...! அப்போ பிரேமலதா கூறியது உண்மைதான் போல...!
LK sudeesh said truth what Premalatha said was true
தே.மு.தி.க - அ.தி.மு.க இருகட்சிகளும்,கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கூட்டணி வைத்தது. அப்போது அ.தி.மு.க, தே.மு.தி.க.வுக்கு 5 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கியது. மேலும் ஒரு மாநிலங்களவை எம்.பி. சீட்டு தருவதாக அ.தி.மு.க.வாய்மொழி உத்தரவாதம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் 'பிரேமலதா' விஜயகாந்தும் உறுதி செய்தார்.ராஜ்யசபா சீட் குறித்து ஒப்பந்தம் செய்யப்படாவிட்டாலும் அ.தி.மு.க. சார்பில் வாய்மொழி உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி' தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக தாங்கள் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அ.தி.மு.க. தெரிவித்தது உண்மைதான் என்று அக்கட்சியின் பொருளாளர் 'எல்.கே.சுதீஷ்' தெரிவித்துள்ளார்.
எல்.கே.சுதீஷ்:
இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்,"ஒரு ராஜ்ய சபா எம்.பி. சீட் தருவதாக அ.தி.மு.க. வாக்குறுதி அளித்தது முழுக்க முழுக்க உண்மை.அ.தி.மு.க. அளித்த உத்தரவாதத்தால்தான், 2024 பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாக பேசுவேன்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
LK sudeesh said truth what Premalatha said was true