நவ.9ல் நான் ஊரில் இல்லை.!! அமைச்சர் கே.என் நேருவின் முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேருவுக்கு வரும் நவம்பர் 9ம் தேதியோடு 70 வயது நிறைவடைந்து 71 வது வயது தொடங்குகிறது. அதனை சீரும் சிறப்புமாக கொண்டாடும் வகையில் திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டிருந்தனர். திருச்சி மாவட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கே.என் நேரு பிறந்தநாள் கொண்டாட நினைத்த உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி கே.என் நேரு வெளியிட்டுள்ள அறிவிப்பில் "எனது பிறந்த நாளான வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நான் ஊரில் இல்லை. அன்றைய தினம் என்னுடைய பிறந்த நாளை ஒட்டி என் மேல் அன்பு கொண்ட நல்ல உள்ளங்களும், நண்பர்களும், கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திருச்சிக்கோ, சென்னைக்கு நேரில் வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்த வரவேண்டாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அன்றைய தினம் என்னுடைய பிறந்தநாள் விழா என்ற பெயரில் எந்தவித நிகழ்ச்சியும் தயவு செய்து யாரும் நடத்திட வேண்டாம் என்பதை கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KN Nehru announced do not to celebrate his birthday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->