வாழ்வா..? சாவா..? இரண்டு அணியில் யார் உள்ளே..? யார் வெளியே..? தீர்மானிக்கப்போகும் மும்பை அணியின் வெற்றி, அல்லது தோல்வி.!! - Seithipunal
Seithipunal


இந்த ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க அட்டகாரகளாக களமிறங்கிய கிறிஸ் லின், ஷுப்மான் கில் முதல் இரண்டு ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தனர். மும்பை இந்தியன்ஸ்ன் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் கொல்கத்தா அணி தடுமாறியது.

முதல் பவர்பிளேயில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை எடுத்து. அடுத்த ஓவரில் ஷுப்மான் கில் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 9-வது ஓவரில் கிறிஸ் லின் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ராபின் உத்தப்பா கடைசி வரை நின்று போராடி 40 ரன்கள் அடித்தார். கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே எடுத்து, மும்பை அணிக்கு எளிய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

தற்போது மும்பை அணி 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.

புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடத்தில உள்ள சிஎஸ்கே, பஞ்சாப், மும்பை அணிகள், குவாலிஃபயர் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. தற்போது நடந்து வரும் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை அணி வென்றால், சன்ரைசர்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழையும். மும்பை அணி தோற்றால் கொல்கத்தா அணி ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை தட்டி செல்லும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kkr vs mi match 1st half


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->