விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர், தொண்டர் மீது வழக்கு பதிவு!
Karur Stampede TVK Vijay tn police case file
கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.
இதற்கிடையில், கரூர் மாவட்ட தவிட்டுப்பாளையம் சோதனைச்சாவடி அருகே விஜயின் பிரசார பேருந்தைச் சுற்றி இன்னொரு விபத்து நடந்தது. பேருந்தின் முன்பு சென்ற பைக் மீது அருகிலிருந்த மற்றொரு பைக் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் சக்கரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த காட்சி இணையத்தில் பரவியது. அதிர்ஷ்டவசமாக, பைக்கில் சென்றவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விஜயின் பிரசார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி, வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, பிரசார பேருந்தின் ஓட்டுநர் மற்றும் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
English Summary
Karur Stampede TVK Vijay tn police case file