15 வயது சிறுமியுடன் திருமணம் - மாப்பிள்ளை உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு.!
case file against 5 peoples for get marriage 15 years old girl in salem
சேலம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்ததாக ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் கண்ணதாசன். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த மாதம் 25-ந் தேதி கோவிலில் திருமணம் செய்துள்ளார்.

அதன் பின்னர் இருவரும் தம்பதியினராக வாழ்ந்து வந்தனர். இதுதொடர்பாக ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் மனோரஞ்சிதத்திற்கு புகார் வந்தது. இது குறித்து அவர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்தப் புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, கண்ணதாசன், அவருடைய தந்தை அண்ணாதுரை, தாயார் சின்ன பாப்பா, அக்காள் சித்ரா, தங்கை பிரியா உள்ளிட்ட 5 பேர் மீதும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
case file against 5 peoples for get marriage 15 years old girl in salem