தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு - திக்குமுக்கு ஆடிய ஏர் இந்தியா விமானிகள்.!
technical issue in air india flight
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிலிருந்து இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமுக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் சென்றது. அதன் படி இந்த விமானம் பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் அவசரகால ரேம் ஏர் டர்பைன் தானாகத் திறந்து கொண்டது.
இதை கவனித்த விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினர். விமானம் தரையிறங்கிய உடனே அனைத்துப் பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக கீழே இறங்கினர். இந்தச் சம்பவத்தால் பயணிகளுக்கு பதற்றம் ஏற்பட்டது.

தற்போது விமானம் பர்மிங்காமில் ஆய்வில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்கிருந்து டெல்லிக்குச் செல்லும் அடுத்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
English Summary
technical issue in air india flight