கேள்விகள் கேட்பது தேசத்துரோகமா? - கடுமையாக கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்
Is asking questions treason Chief Minister strongly condemns
பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களான சித்தார்த் மற்றும் கரண் தாப்பருக்கு அசாம் காவலர்கள் சம்மன் அனுப்பி விவகாரம் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவில் வெளியிட்டதாவது," உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு இருவர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்த சில நாட்களிலேயே சம்மன் அனுப்பி வைத்தது.இதில் அந்த சம்மனில் FIR நகல் இணைக்கப்படாமல் இருந்துள்ளது.
இருப்பினும் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இருவரும் கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதில் பத்திரிகை சுதந்திரத்தை முடக்க தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால் ஒரு ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த கண்டனத்தை தற்போது இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.அதில் பேச்சு சுதந்திரத்தை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
English Summary
Is asking questions treason Chief Minister strongly condemns