பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானை பதம் பார்த்த இந்தியா; 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி..!
India beat Pakistan by 88 runs in Women's World Cup Cricket League match
13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 08 அணிகள் பங்கேற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இன்று இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 06-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா 23 ரன்களிலும், பிரதிகா 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஹெர்லின் 65 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய ஜெரேமியா 32 ரன்களிலும், தீப்தி 25 ரன்களிலும், ரானா 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் இந்தியா எடுத்து. பாகிஸ்தான் தரப்பில் டையானா பைஹ் 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக, 248 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீராங்கனைகள் முனிபா 02 ரன்களிலும், ஷமாஸ் 06 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த சிட்ரா அமின் பொறுப்பாக விளையாடி (106 பந்துககளை எதிர்கொண்டு, 09 பவுண்டரிகள், 01 சிக்சர் என 81 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய மற்ற வீராங்கனைகளான ரியாஸ் 02 ரன்களிலும், நடாலியா பர்வேஷ் 33 ரன்களிலும், கேப்டன் பாத்திமா 02 ரன்களிலும், சிட்ரா நவாஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இருதியில், பாகிஸ்தான் அணி, 43 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மாத்திரமே எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ஈட்டியுள்ளது.
English Summary
India beat Pakistan by 88 runs in Women's World Cup Cricket League match