கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த செய்தி தொகுப்பாளர்: சிகிச்சை பலனின்றி பரிதமாக பலி..!
News anchor dies tragically after jumping from a building to escape robbers
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரைஸ் என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தில், செய்தி தொகுப்பாளராக சொமுச்குவா சவுமி மடூஹ்வா (வயது 29) பயணியாற்றி வந்துள்ளார். இவர் தலைநகர் அபுஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினமான கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆயுதமேந்திய கொள்ளையர்கள் சவுமி மடூஹ்வாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்ததை அறிந்த சவுமியா, தப்பிக்க தனது வீடு அமைந்துள்ள 03-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சவுமியாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவர் வேலை செய்த செய்தி நிறுவனம் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
News anchor dies tragically after jumping from a building to escape robbers