விருதுநகர் அருகே சோகம்: லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் விபத்து: முற்றிலும் எரிந்து போன பேருந்து; ஓட்டுனர்களின் நிலை..? - Seithipunal
Seithipunal


விருதுநகர் அருகே ஆர்ஆர் நகரில் இருந்து சிமெண்டு மூடைகள் ஏற்றிய லாரி ஒன்று தென்காசி நோக்கி சென்றுள்ளது. லாரியை 42 வயதுடைய ராகவன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். சேவை சாலையில் இருந்து மெயின் ரோட்டில் லாரி ஏறிய போது, சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணிகள் இல்லாமல் சென்ற தனியார் ஆம்னி பஸ், லாரி மீது மோதியத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லாரியும் ஆம்னி பஸ்சும் தீப்பற்றி எரிந்துள்ள நிலையில், லாரி ஓட்டுநர் ராகவன், ஆம்னி பஸ் ஓட்டுனர் கணேசன் (25) இருவரும் தீக்காயம் அடைந்துள்ளனர். ஆம்னி பஸ் ஓட்டுநர் உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கியதால் சிறிய காயத்துடன் தப்பியுள்ளார்.

பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர் ராகவன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  அத்துடன், ஆம்னி பஸ் டிரைவர் கணேசன், சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் விருதுநகர், சாத்தூரில் இருந்து விரைந்து சென்று லாரி மற்றும் ஆம்னி பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An omni bus crashed into a lorry near Virudhunagar, causing the bus to burn completely


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->