மத்திய பிரதேசத்தில் தொடரும் சோகம்: இருமல் மருந்து குடித்து பலியான குழந்தைகள் எண்ணிக்கை 14 ஆக உயர்வு..! - Seithipunal
Seithipunal


இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியான விவகாரத்தில் அவர்களுக்கான இழப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுடைய கணக்கிற்கு பணம் சென்று விட்டதாக சிந்த்வாராவின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திரேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்டதில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது சர்ச்சையான நிலையில், உயிரிழந்த எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, சிந்த்வாராவின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திரேந்திரா சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 14 குழந்தைகள் பலி என எங்களுக்கு அறிக்கை தரப்பட்டுள்ளது. இழப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுடைய கணக்கிற்கு பணம் சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 08 குழந்தைகளுக்கு சிந்த்வாராவின் நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், நிர்வாக அளவில் அதனை கவனிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், குழு ஒன்றை, மருந்தாளுநர் உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகளை கண்டறியும் பணியும் நடந்து வருகிறதாகவும், அதனை பறிமுதல் செய்து வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, குறித்த குழு தமிழகத்திற்கு விரைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த இருமல் மருந்து காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள, 'ஸ்ரீசன் பார்மா' என்ற கம்பெனியில் தயாரிக்கப்பட்டதும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The number of children who died after consuming cough medicine in Madhya Pradesh has risen to 14


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->