அரபிக்கடலில் புதிய துறைமுகம் அமைக்கும் பாகிஸ்தான்: சிவில் துறைமுகத்தை உருவாக்கும் அமெரிக்கா..?
Pakistan to build new port in Arabian Sea
சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனிர் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போது கனிம வளங்கள் ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. அத்துடன், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம மாதிரிகளை ஷபாஸ் ஷெரீப் மற்றும் அசீம் முனிர் டிரம்பிடம் காண்பித்துள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான், அரபிக் கடலில் புதிய துறைமுகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அமெரிக்காவின் உதவியை நாடி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம வளங்களை பூமியில் இருந்து வெட்டி எடுத்து தனது பொருளாதாரத்தை மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது.

மேலும் குறித்த கனிமங்களை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல பலுசிஸ்தான் மாகாணம் குவாதர் மாவட்டம் அருகே உள்ள கடற்கரை நகரமான பாஸ்னியில் புதிய துறைமுகம் கட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன், அங்கு சிவில் துறைமுகத்தை அமெரிக்கா உருவாக்கலாம் என்று பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளது. இதனையடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தத்துறைமுகத்தைக் கட்டவும் இயக்கவும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனிமங்களை கொண்டு செல்வதற்கான புதிய ரெயில் பாதையுடன் இணைக்கப்படும் ஆப்கானிஸ்தான் மற்றும் எல்லையான ஈரானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் துறைமுக நகரமான பஸ்னி தற்போது இந்தியா மேம்படுத்தி வரும் ஈரானின் சாபஹார் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan to build new port in Arabian Sea