'அதிமுக மக்களுக்காக திட்டம் தீட்டியது: திமுக குடும்பத்துக்காக திட்டம் போட்டு கோடி கோடியாகக் கொள்ளையடிக்கிறது': இ.பி.எஸ். தாக்கு..!
EPS says DMK is planning to loot crores for the family
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும், 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று கலசபாக்கம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் பேசியதாவது:
மக்கள்தான் எஜமானர்கள், தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளதோடு, தமிழகத்தில் அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு எது சிறந்தது என்று முடிவுசெய்து 2026 தேர்தலில் முடிவை வழங்குங்கள் என்று பேசியுள்ளார்.

அத்துடன், அதிமுக ஆட்சி மக்களாட்சி என்றும், திமுக குடும்ப ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டதோடு, அதிமுக அரசில் மக்களுக்காக திட்டம் தீட்டினோம், ஆனால், திமுக குடும்பத்துக்காக திட்டம் போட்டு கோடி கோடியாகக் கொள்ளையடிக்கிறது என்று குற்றம் சுமத்தியுள்ளளார்.
தற்போது, தமிழகம் முழுவதும் போதைப் பொருள் சகஜமாகிவிட்டது என்றும், இளைஞர்கள் சீரழிவதால் குடும்பங்கள் அழிகிறதாகவும், எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. பணம் கொடுக்காமல் எதுவும் இங்கு நடக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், யாரெல்லாம் கப்பம் கட்டுகிறார்களோ, அவர்களை எல்லாம் சிறந்த அமைச்சர் என்று பட்டம் சூட்டுகிறார் என்றும், சிறந்த நிர்வாகம் செய்பவர்களுக்குப் பட்டம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், துட்டு அதிகமாகக் கொடுப்பவர்தான் சிறந்த அமைச்சர். எல்லா அரசிலும் நிர்வாகத் திறமைமிக்க அமைச்சர்களுக்கே மதிப்பு. ஆனால், திமுக ஆட்சியில் கப்பம் கட்டுபவர்களுக்குத்தான் நல்ல இலாகா உண்டு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இன்று அதிமுகவில் இருந்துதான் பல பேர் அமைச்சர்களாக டெபுடேஷனில் திமுகவுக்கு போயிருக்கிறார்கள். அதிமுகவைச் சேர்ந்த 08 பேர் திமுக அமைச்சரவையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் பலர் எம்.எல்.ஏ . ஆகியிருக்கிறார்கள். இவர்கள் சரியான முறையில் மாமுல் வாங்கி மேலிடத்துக்கு கொடுக்கிறார்கள் என்று பேசியுள்ளார். அதனால் திமுகவுக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
EPS says DMK is planning to loot crores for the family