அதிர்ச்சி வீடியோ! நூலிழையில் தப்பிய 280 பேர்! நாடு வானில் போயிங் விமானத்தில் தீ விபத்து! பறவையால் ஏற்பட்ட தீப்பொறி!
Boeing 757 Flames After Bird Strike Italy 273 Passengers life saved
கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டிருந்த போயிங் 757 விமானம், புறப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள் பெரும் சிக்கலை சந்தித்தது. விமானத்தின் வலதுபுற என்ஜினில் திடீரென தீப்பற்றி புகை கிளம்பியதால், பயணிகள் பதட்டத்தில் ஆழ்ந்தனர்.
உடனடியாக விமானி அவசர தகவலை அனுப்பி, விமானத்தை இத்தாலியின் பிரின்டிசி விமான நிலையத்தில் தரையிறக்கினார். அதிர்ஷ்டவசமாக, 273 பயணிகளும் 8 விமான ஊழியர்களும் எந்த உயிரிழப்பும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பயணிகள் தரையிறங்கியவுடன் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் குறித்து தொடக்க கட்ட விசாரணையில், வானில் பறக்கும் போது பறவை ஒன்று என்ஜினுடன் மோதியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இயந்திரம் செயலிழந்து தீப்பற்றி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த விமானம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு, தொழில்நுட்ப நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Boeing 757 Flames After Bird Strike Italy 273 Passengers life saved