எங்கோ இருந்து வந்து என் மீது கை வைக்கிறாயா?  பிரசவத்துக்கு வந்த இடத்தில் தகராறு .. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


மனைவியை பிரசவத்துக்கு அழைத்து வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை ஒருவர் குத்தி கொன்ற சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்த விஜய்  தனது மனைவி ரஞ்சனாவுடன் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியானார்.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விஜய் தனது மனைவியை பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது வயிற்றில் இருக்கும் குழந்தையின் தலை திரும்பி இருந்ததால் டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு செல்லுமாறு கூறினர்.

இதையடுத்து விஜய் தனது மனைவி ரஞ்சனாவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து பிரசவ வார்டில் அனுமதித்தார். அதே வார்டில் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விக்னேஷ் என்பவர் தனது மனைவி கீர்த்திகாவையும் அனுமதித்து இருந்தார். அப்போது விஜய்க்கும், விக்னேசுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த வாரம் விஜய்க்கும், விக்னேசுக்கும் இடையே மதுபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்ட போது விஜய், விக்னேசை தாக்கி உள்ளார். இதற்கிடையே விக்னேஷ் மனைவிக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பினர். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுக்கு வந்த விக்னேஷ் விஜய்யை  ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கோவில் அருகே அழைத்து எங்கோ இருந்து வந்து என் மீது கை வைக்கிறாயா? என கேட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென விஜய்யை சரமாரியாக குத்தினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் விஜய்யை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை வார்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விஜய்யை கத்தியால் குத்தி கொன்ற விக்னேசை அங்கு இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you coming from somewhere and laying your hands on me? A dispute at the place of delivery a tragedy that happened to a young man


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->