அதிர்ச்சி கொடுத்த ஜியோ! முக்கிய பிளான் நீக்கம்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
JIo 249 reacharge plan removed
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது பிரபலமான ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை திடீரென ரத்து செய்துள்ளது.
இதன் மூலம், தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கும் ஒரே திட்டமே நீக்கப்பட்டதால், ஜியோ சேவையில் இப்போது அந்த வகை பேஸிக் ரீசார்ஜ் இல்லை.
தற்போது ரூ.299 (1.5 ஜிபி/நாள்) திட்டமே குறைந்தபட்ச மாதாந்திர பிளானாக உள்ளது. ரூ.249 திட்டம், தினசரி 1 ஜிபி டேட்டா தேவைப்படும் பயனர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இப்போது அது ரீசார்ஜ் செய்ய முடியாத நிலையில், ஜியோ நிறுவனம் புதிய 1 ஜிபி டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்துமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
இருப்பினும், ஜியோவில் ரூ.189, ரூ.198 மற்றும் ரூ.239 போன்ற குறைந்த விலையில் திட்டங்கள் இன்னும் கிடைக்கின்றன.
ஆனால் இத்திட்டங்கள், ரூ.249 திட்டத்துடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த கால வேலிடிட்டியையே வழங்குகின்றன.
பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ரூ.249 திட்டத்தை நீக்கியிருப்பது, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
JIo 249 reacharge plan removed