ED நோட்டீசுக்கு இடைக்கால தடை! நிம்மதி பெருமூச்சு விட்ட திமுக எம்பி!
DMK MP Jagath Ratchagan ED Raid SC order
அமலாக்கத்துறை (ED) அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக DMK மூத்த தலைவர் ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
வெளிநாட்டு நிறுவன பங்குகளை ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் வாங்கியதாக ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை சவாலுக்கு உட்படுத்தி அவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு, அமலாக்கத்துறை நோட்டீசுக்கு இடைக்கால தடை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும், வழக்கின் மீது விரிவான விசாரணை நடைபெறும் வரை நோட்டீசின் அமலாக்கம் நிறுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஜெகத்ரட்சகனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த இடைக்காலத் தடையுத்தரவு, ஜெகத்ரட்சகனுக்கு தற்காலிக நிம்மதியாக அமைந்துள்ளது.
English Summary
DMK MP Jagath Ratchagan ED Raid SC order