இஸ்ரேல், ஹமாஸ் போர் 60 நாள் நிறுத்தம்! ஓகே சொன்ன ஹமாஸ்!
gaza Hamas war stopped in 60 days
கடந்த 2023 ஆம் ஆண்டில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த இஸ்ரேல் போர் அறிவித்து, காசா மீது கடும் தாக்குதலை ஆரம்பித்தது.
இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் தோற்கடிக்கும் வரை காசா மீதான தாக்குதலை நிறுத்தமாட்டோம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு இதுவே ஒரே வழி என பிரதமர் நேதன்யாகு மீண்டும் மீண்டும் தெரிவித்துவருகிறார்.
இந்த சூழலில் பணயக்கைதிகளை விடுவிக்கும் நோக்கில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரை முன்மொழியப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலும் சம்மதித்தால், 60 நாட்கள் காசா மீது தாக்குதல் நிறுத்தப்படும். அந்த இடைப்பட்ட காலத்தில் ஹமாஸ் பிடித்திருக்கும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பல பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போர் காலத்தில் இரண்டு முறை மட்டுமே தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
gaza Hamas war stopped in 60 days