அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையே இதான்... எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த வாக்குறுதி!
admk edappadi palanisamy DMK MK Stalin election 2026
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, போளூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியை மக்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர். எங்கும் அதிருப்தி குரல் எழுந்து வருகிறது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்லும்.
எங்கள் ஆட்சியில் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி இரண்டு முறை வேளாண் கடன் தள்ளுபடி செய்தோம். உழவர் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் பல்வேறு நிவாரணங்களும் வழங்கினோம். அதேபோல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட்டது அதிமுக அரசே.
இப்போது தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் போதைப்பொருள் பிரச்சினையை, எங்கள் ஆட்சியில் முழுமையாக ஒழிக்கப்படும். அதிமுக அரசின் நோக்கம், இளைஞர்களை காப்பதே.
மேலும், மருத்துவக் கல்வி கனவாக இருந்த ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். அதன் மூலம் பல மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
எனவே, திமுக ஆட்சியை அகற்றி, தமிழக வளர்ச்சிக்காக அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
English Summary
admk edappadi palanisamy DMK MK Stalin election 2026