அதிகாலையில் துல்கர் சல்மான் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் - சென்னையில் பரபரப்பு.!!
Enforcement officers raide in actor dulquer salman hosue in chennai
திரைத்துறையில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் துல்கர் சல்மான். இவரது தயாரிப்பில் கடந்த மாதம் "லோகா சாப்டர் 1" என்ற படம் வெளியாகி, மாபெரும் வசூலை அள்ளியது. அதுமட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
இதையடுத்து, கடந்த மாதம் கொச்சியில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் இரண்டு சொகுசு கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் கிரீன்வே சாலையில் உள்ள துல்கர் சல்மானிற்கு சொந்தமான வீட்டில் ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், அவரது தயாரிப்பு நிறுவன அலுகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை, பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செயப்பட்ட விவகாரத்தி சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் நடத்தபடலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த சோதனை திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Enforcement officers raide in actor dulquer salman hosue in chennai