2026 தேர்தல்: ஜே.பி. நட்டாவின் தமிழக பயணம் திடீர் ரத்து!
BJP JP Nadda Nainar Nagendran election campaign 2026
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் அக்டோபர் 12ஆம் தேதி மதுரையில் இருந்து தனது பிரசாரப் பயணத்தை தொடங்க உள்ளார். ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த முதல் கட்ட பிரசாரம் 5 நாட்கள் நீடிக்கும். மதுரையில் தொடங்கும் இந்தப் பயணம் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை கடந்து, அக்டோபர் 17ஆம் தேதி நெல்லையில் நிறைவடைகிறது.
கரூர் விபத்துக்குப் பிறகு மதுரையில் நடைபெறவுள்ள இந்தப் பிரசாரத்துக்கு மதுரை போலீசார் பல்வேறு பாதுகாப்பு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
மதுரையில் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரசாரப் பயணத் தொடக்க நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பங்கேற்று உரையாற்றுவதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது ஜே.பி. நட்டாவின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனுடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
English Summary
BJP JP Nadda Nainar Nagendran election campaign 2026