ஜம்மு-காஷ்மீர் மாயமான 2 இந்திய இராணுவ வீரர்கள்!
jammu kashmir 2 army mans missing
ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், பாதுகாப்புப்படையின் இரண்டு வீரர்கள் மாயமானதால், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியா–பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளை வீழ்த்தும் நடவடிக்கையில், பாதுகாப்புப் படையினர் கடந்த இரண்டு நாட்களாக கோகேர்நாக் அருகே உள்ள அஹ்லான் கடோல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இரண்டு வீரர்கள் திடீரென மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கண்டறிய ஹெலிகாப்டர்களும், சிறப்பு தேடுதல் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
அஹ்லான் கடோல் பகுதி, அண்மைய ஆண்டுகளில் பயங்கரவாதிகளின் முக்கிய தளமாக மாறியுள்ளது. 2023 செப்டம்பர் மற்றும் 2024 ஆகஸ்ட் மாதங்களிலும் இங்கு பெரிய அளவில் என்கவுண்டர்கள் நடைபெற்றிருந்தன.
கடந்த மாதம் நடைபெற்ற மோதலில் இரண்டு வீரர்களும், ஒரு உள்ளூர் நபரும் உயிரிழந்தனர். அதற்கு முன்பு நடந்த மற்றொரு சம்பவத்தில், இரண்டு அதிகாரிகள், இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.
தற்போது, மாயமான வீரர்களை மீட்கும் நடவடிக்கை முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.
English Summary
jammu kashmir 2 army mans missing