கரூர் செல்லும் விஜய்..! செல்லும் தேதி, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்களை கேட்ட டிஜிபி அலுவலகம்!
Karur Stampede TVK Vijay tn police
தவெக தலைவர் விஜய் விரைவில் கரூருக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டுள்ளார்.
அவரது கரூர் பயணத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, தவெக நிர்வாகிகள் இன்று டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர். இதற்கு முன் நேற்று மெயிலில் மனு அனுப்பியிருந்த நிலையில், இன்று நேரில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, டிஜிபி அலுவலகம் பதில் அளித்துள்ளது. அதில், தவெக சார்பில் ஒருவரை பிரதிநிதியாக நியமித்து, கரூர் மாவட்ட எஸ்.பி-யை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விஜய் கரூருக்கு செல்லும் தேதி, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்களை கரூர் காவல்துறைக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விவரங்கள் கிடைத்தவுடன், விஜயின் பாதுகாப்பு குறித்து தேவையான ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
English Summary
Karur Stampede TVK Vijay tn police