மனஉளைச்சல் முடிவில் தாய் எடுத்த அதிர்ச்சி தீர்மானம்… குழந்தைகள் உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் மனதை உருக்கும் கொடூர சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதாமி தாலுகாவிற்கு உட்பட்ட ஹிரேமுச்சல்குட்டா கிராமத்தைச் சேர்ந்த ரூபா ஹனுமந்த் கவுடர் (28) என்ற இளம் பெண், தனது மூன்று பச்சிளம் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

5, 4 மற்றும் 2 வயதுடைய குழந்தைகளே அவரின் உலகமாக இருந்தனர்.மேலும், குடும்பத்தினருடன், குறிப்பாக கணவர் மற்றும் மாமியாருடன், அடிக்கடி ஏற்பட்ட தகராறுகள் காரணமாக வீட்டில் நிரந்தர பதட்டமான சூழல் நிலவியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியதால், விரக்தியடைந்த ரூபா அதிர்ச்சி முடிவெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, தனது மூன்று குழந்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தூக்கிலிட்டு கொலை செய்துள்ளார். பின்னர் தானும் உயிரை மாய்த்துக்கொள்ள விஷம் அருந்தியுள்ளார். எனினும், அவர் உயிரிழக்காமல் மயக்கநிலைக்குள் தள்ளப்பட்டார்.

உடனடியாக மீட்கப்பட்ட ரூபா, ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Overwhelmed by mental distress mother made shocking decision resulting death her children


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->