மனைவியின் நோய் தாங்காமல் கணவர் எடுத்த விபரீத முடிவு...!- குழந்தையுடன் குடும்ப துயரம் - Seithipunal
Seithipunal


கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள சாந்திமேடு தம்புநகர் பகுதியைச் சேர்ந்த கமலேஷ் (48), கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி இலக்கியா, மகள் எக்ஷிதா ஏஞ்சல் (10) ஆகியோருடன் அமைதியாக குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார்.

மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், இலக்கியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை மேம்படாததால் குடும்பம் முழுவதும் மனவேதனையில் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது.

நீண்டநாள் துயரமும், எதிர்காலம் குறித்த அச்சமும் அதிகரித்ததால், கமலேஷ் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் கடுமையான முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, நேற்று இரவு தனது மனைவிக்கும் மகளுக்கும் விஷம் கொடுத்து, பின்னர் தானும் விஷம் அருந்தியுள்ளார்.

சில நிமிடங்களில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையே, தனது முடிவுக்கான காரணங்களை விளக்கும் வகையில் கமலேஷ் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். மனைவியின் உடல்நலப் பிரச்சனை மற்றும் குடும்பத்தின் மனஉளைச்சல் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை அப்பகுதியில் உள்ள ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.இரவு நேரமாக இருந்ததால், அந்த நபர் உடனடியாக வீடியோவை கவனிக்கவில்லை. இன்று அதிகாலை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, படுக்கையில் கமலேஷ், அவரது மனைவி மற்றும் மகள் மூவரும் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் உடல்நிலை பாதிப்பே இந்த துயர முடிவுக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பதைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unable bear his wife illness husband took drastic step family tragedy involving child


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->