திடீர் திருப்பம்! முதல்வர் ராஜினாமா செய்ய போகிறாரா?! அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்க ஆலோசனை!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் தற்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் கொள்கை முடிவை பொறுத்தவரை 75 வயதை தாண்டியவர்களுக்கு ஓய்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போதைய முதல்வர் எடியூரப்பா வுக்கு 75 வயதை கடந்துவிட்டது. இருப்பினும் அவரது செல்வாக்கை கருத்தில் கொண்டு அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பாஜக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் முடிவில் இறங்கியுள்ளது. இதற்கு ஒரே காரணம் தான் சொல்லப்படுகிறது, வரும் 2023 சட்டமன்ற தேர்தலில் புதிதாக ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுத்தால், அப்போது அவருக்கு கிடைக்கும் ஆதரவு குறைவாகவே இருக்கும்.

ஆனால் அதற்கு முன்பே எடியூரப்பாவுக்கு மாற்றாக வேறொரு முதல்வரை தேர்ந்தெடுத்து, அவர் தற்போது முதல்வராக பணியாற்றினால் அவருக்கு மாநில மக்களிடையே ஆதரவு பெருகும் என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

பாஜக லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது துணை முதல்வராக இருக்கும் லட்சுமணன் சவுதியை முதல்வராக நிறுத்தலாமா என்று பாஜக மேலிடம் செய்த ஆலோசனையில், அவருக்கான ஆதரவு கட்சியிலும், மாநிலத்திலும் குறைவாகவே இருப்பதால் எடியூரப்பா கைகாட்டும் ஒருவரே அடுத்த முதல்வராக வரலாம் என்று அம்மாநில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், எடியூரப்பா பாஜகவின் கொள்கை முடிவை தனது ஆதரவு பலத்தால் தகர்த்து, தொடர்ந்து முதல்வராக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாகவே அம்மாநில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம், எடியூரப்பா கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து, அந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.

லிங்காயத் சமூக வாக்கு மட்டும் இல்லாமல், அவருக்கு பல்வேறு சமூகத்தில் இருந்தும் ஆதரவும் வாக்குகளும் வந்ததால், அவர் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக உருவெடுத்து விட்டார். இதனால் பாஜக தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடியூரப்பா தொடர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, வரும் மூன்று ஆண்டுகள் மட்டும் தான் நான் முதல்வராக இருப்பேன் என்று எடியூரப்பா கூறிவரும் முடிவை பாஜக மேலிடம் ஏற்குமா., அல்லது வேறு ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்க முற்படுமா என்ற சந்தேகங்கள் கர்நாடக மாநிலத்தில் பரபரபப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ediyurappa cm post issue


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal