விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் - மருத்துவர் இராமதாஸ் புகழாரம்!
Dr Ramadoss say about Ramasami Padayatchi Birth day 2023
விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் சமூகநீதிக்கான அவரின் பங்களிப்பைப் போற்றுவோம் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 106-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
உழவர் உழைப்பாளர் கட்சியை நிறுவிய அவர், அக்கட்சியின் மூலம் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்தவர். அவரது பிறந்த நாளில் சமூகநீதிக்கான அவரது பங்களிப்பை நாம் போற்றுவோம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "உழைக்கும் குடியான வன்னிய மக்களின் சமூகநீதிக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்த உழைப்பாளர் மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவரது பணிகளையும், சிறப்புகளை போற்றுவோம்... வணங்குவோம்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss say about Ramasami Padayatchi Birth day 2023