இசைஞானி இளையராஜா ஒரு மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மருந்து - உதயநிதி புகழாரம்!
DMK Udhayanidhi Stalin Ilayaraja TNGovt
இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது: “நாம் அனைவரும் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும், நம்மை தாலாட்டியிருக்கிற இசைத்தாய் இளையராஜாதான். அவருடைய பாடல்களில்லாமல் எந்தக் குழந்தைக்கும் தாலாட்டு இல்லை, இளமையில் துள்ளல் இல்லை, காதல் இல்லை.
வயல்வெளி, டீக்கடை, திருமணம், ஆட்டோ, பேருந்து என எல்லா இடங்களிலும் அவரின் இசை நிறைந்து கிடக்கிறது. இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு இசை மருத்துவராகவும் உள்ளார். மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மருந்தாக அவரது இசை செயல்படுகிறது.
சிறுவயதிலிருந்து நானும், கோடிக்கணக்கான மக்களும் இளையராஜாவின் பாடல்களோடு வளர்ந்தோம். இன்று கூட, என்னுடைய பிளேலிஸ்டில் எப்போதும் அவரது பாடல்கள்தான் ஒலித்துக்கொண்டிருக்கும்.
இளையராஜா என்கிற பெயருடன் தொடங்கிய தலைப்புகளில் எத்தனையோ வெற்றிப் படங்கள் வந்துள்ளன. சுறுசுறுப்பாகவும், ஒழுக்கமாகவும், புதுமையாகவும் இருக்க வேண்டும் என்றால், அனைவருக்கும் முன்னுதாரணம் அவர் தான்” என்றார்.
English Summary
DMK Udhayanidhi Stalin Ilayaraja TNGovt