தமிழக பொம்பளைங்க இடுப்பு அப்படிதான் இருக்கு., லியோனி சொல்லியது சரிதான்., ஸ்டாலின் உறுதி?!  - Seithipunal
Seithipunal


தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஐ.லியோனி பேசுகையில், "மாடுகளில் பலவகை உண்டு. பண்ணைகளில் வளர்க்கப்படும் ஒரு வகை மாடு உள்ளது. அது வெளி நாட்டு மாடு. அந்த மாட்டின் காம்பில் பால் கறப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா?

அதன் மடியில் ஒரு இயந்திரத்தை பொருத்தி 40 லிட்டர் பால் கறந்து விடுவார்கள். அந்தப் பாலை கொடுத்து., கொடுத்து தான் நம்ம பொம்பள பிள்ளைக பலூன் போன்று ஊதி கிடக்கின்றார்கள்.

ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 போன்று இருந்தது. பிள்ளைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவன் பாட்டுக்கு உட்கார்ந்து கிடைப்பான்" என்று ஆபாசமாக ஐ.லியோனி பேசியது தமிழக மக்களை அதிர வைத்துள்ளது. 

இந்நிலையில், லியோனி பேசியதற்கு தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார். முன்னதாக அவரை நிற்க வைத்து தொகுதி பெண்கள் கேள்வி எழுப்பியதால் தற்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால், தமிழக பெண்களின் இடுப்பு பலூன் போல் ஆகிவிட்டது என்று கூறிய லியோனி தான் கூறிய கருத்து சரிதான் என்ற மனநிலையில் இருந்து வருகிறார். இதே மனநிலையில் தான் திமுக தலைவர் முக ஸ்டாலின் இருந்து வருகிறார் போல, இதுவரை வாய் திறக்கவில்லையே என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK tn ladies iduppu issue


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->