திமுக எம்பி மகனுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை - தமிழக அரசு பதில்மனு! - Seithipunal
Seithipunal


திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “அண்மையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த15 ஆடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டேன். 

இதனால் சீமான் என்மீது பழிவாங்கும் நோக்குடன், அவரின் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் மூலம் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். என்மீது தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த 2022-ல் என் வீட்டிற்கு மீது சிலர் தாக்குதல் நடத்தி உள்ளதால், எனக்கும், என் குடும்பத்தினருக்கும் காவல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். 

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், “தற்போதைய சூழலில் மனுதாரக்கு காவல் பாதுகாப்பு தேவையில்லை. அனைவருக்கும் காவல் பாதுகாப்பு வழங்க முடியாது. மேலும், இந்த மனுவிற்கு பதிலளிக்க கால அவகாசம் தேவை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் தரப்பில் இடையீட்டு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியினரைக் குறைவாக பேசி திருச்சி சூர்யா அவதூறு பரப்பி வருகிறார். எங்கள் மீது குற்றம் சாட்டி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்” எனக் கூறப்பட்டிருந்தது. 

இதனையடுத்து நீதிபதி நிர்மல் குமார், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தமிழக டிஜிபி மற்றும் திருச்சி மாநகர காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MP Son case


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->