முந்திரி ஆளை படுகொலை: வெளியான அதிர்ச்சி பிரேத பரிசோதனை.! கொலை வழக்கில் சிக்கினார் திமுக எம்பி.,! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் கடலூர் திமுக எம்.பி ரமேஷ்-க்கு சொந்தமான முந்திரி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றிய மேல் மாம்பட்டை கோவிந்தராசு என்பவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்தப் படுகொலைக்கு காரணம் திமுக எம்பி ரமேஷ் மற்றும் சிலர் கோவிந்தராசுவை தாக்கியது தான் என்று, அந்த ஆலை ஊழியர்களும், கோவிந்தராசுவின் உறவினர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட கோவிந்தராசு அவர்களின் மகன் செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில், "கடந்த 19ஆம் தேதி வேலைக்கு சென்ற எனது தந்தை வீடு திரும்பவில்லை. அவர் விஷம் அருந்தி உயிரிழந்ததாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நான் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது, அவரின் உடலில் ரத்த காயங்கள், அடித்து துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்தது. எனவே எனது தந்தை அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.

அவரின் மரணம் குறித்து கடம்புலியூர் போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை. எனவே எனது தந்தையின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறு ஆய்வு பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தர வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக 6 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், திமுக எம்பி ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள திமுக எம்பி ரமேஷ் தலைமறைவாக உள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் திமுக எம்பி கொலை வழக்கு சம்பந்தமாக, திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ்.,வின் பிரேத பரிசோதனையில், அவரின் பின் மண்டை உடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருவதால், இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கொலை குற்றத்தில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவின் எம்பி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை காப்பாற்றும் வேலையில் திமுக அரசு உள்ளதாகவே பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP ramesh in murder case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->