மு.க. அழகிரியின் இல்லத்தில் முக ஸ்டாலின்!
DMK MK Azhagiri MK Stalin meet
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் இல்லத்திற்கு சனிக்கிழமை இரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றது, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
2014ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி, அதனைத்தொடர்ந்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். எனினும், ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றபோது, மற்றும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனபோது, அவர் வாழ்த்து தெரிவித்ததோடு, நேரில் சந்திப்பும் நிகழ்ந்தது.
அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றபோது ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததும், உறவுநிலை மறுமலர்ச்சிக்கு வழிவகுத்ததாகக் கருதப்பட்டது.
இந்தத் தருணத்தில், திமுக மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டத்திற்கு முந்தைய நாள் அழகிரியை சந்தித்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
English Summary
DMK MK Azhagiri MK Stalin meet