தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் இசைஞானி இளையராஜா...! - பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலக பிரபலம் ''இசைஞானி இளையராஜா''அவர்களுக்கு, இன்று 82-வது பிறந்த நாள்.இதனை திரையுலக பிரபலங்களும், இளையராஜா அவர்களின் குடும்பத்தாரும் கொண்டாடுகிறார்கள்.

இதனையொட்டி அவருக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவுக்கு எக்ஸ் தளம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு குறிப்பிட்டதாவது,"நாட்டுப்புற இசை, தமிழிசை, மரபிசை,மெல்லிசை, துள்ளலிசை,  மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்.நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! "என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Musician Ilayaraja proud symbol Tamils Chief Minister wishes happy birthday


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->