மன்னிப்பு கேட்க முடியாது என தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் போஸ்டரால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் , சிம்பு, திரிஷா என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் 05-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

‘தக் லைஃப்’ படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் கமல்ஹாசன் பேசியிருந்தார். இதற்கு கன்னட அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் நடந்த கூட்டத்தில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அம்மாநில முதல்வர் சித்தாராமையாவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். இதையடுத்து 'தக் லைஃப்' படத்துக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டது. குறித்த தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன் தரப்பில் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் கமல் ரசிகர்கள் பலரும் சேர்ந்து, 'அன்பு மன்னிப்பு கேட்காது,சத்தியம் தலை வணங்காது' என வாசகங்களை அச்சிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal Haasan fans across Tamil Nadu create a stir with a poster saying he cannot apologize


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->