இசைஞானி' திரு.இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.
Happy Birthday to the music maestroMr Ilaiyaraaja
இன்று பிறந்தநாள் காணும் 'இசைஞானி' திரு.இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.
திரையுலகின் முடிசூடா மன்னன் இசைஞானி இளையராஜா 1943ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராசய்யா.
இவர் 26வது வயதில் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தார். பிறகு அன்னக்கிளி திரைப்படம் மூலம் 1976-ல் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இவருக்கு இளையராஜா என்ற பெயரை படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் தான் சூட்டினார். இதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்குப் புதுசு ஆகிய படங்களில் இவரது இசை, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
லண்டனில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவில்(Royal Philharmonic Orchestra) சிம்பொனிக்கு இசையமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

பத்மபூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றுள்ளார்.
குடியரசுத் தலைவர் அவர்கள் இவரை 2022 சூலை 6 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்தார்
English Summary
Happy Birthday to the music maestroMr Ilaiyaraaja