'தக் லைப்' படத்துக்கு தடை: திரைப்பட வர்த்தக சபைக்கு சித்தராமையா ஆதரவு; கர்நாடகாவில் படம் வெளியாவதில் சிக்கல்..? - Seithipunal
Seithipunal


 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், 'தமிழில் இருந்து பிறந்ததே கன்னட மொழி' என்று கமல்ஹாசன் பேசி இருந்தார். இதற்கு கர்நாடகா மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
 
'தக் லைப்' படம் வருகிற 05-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், கர்நாடகாவில் மட்டும் தொடங்கவில்லை. முன்னதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கடந்த 31-ம் தேதி "தக் லைப்" படத்திற்கு தடை விதிப்பதாக தெரிவித்தது. இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு முதலமைச்சர்  சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார்.

திரைப்பட வர்த்தக சபை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து 'தக் லைப்' பட பிரச்சினை குறித்து பேசியுள்ளது. இதனை தொடர்ந்து, வர்த்தக சபைக்கு சட்டரீதியாக ஆதரவு, ஒத்துழைப்பு தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், கன்னட மொழி பிரச்சினையில் அனைவரும் உதியாக நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில்  கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Siddaramaiah supports Karnataka Film Chamber of Commerce over ban on Thug Life


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->