நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி: கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்: பிரதமர் மோடி வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 05 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 06 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் 06-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சனை இறுதிவரை போராடி வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் குகேஷ்-க்கு  பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில்  குறிப்பிட்டுள்ளதாவது: 

"ஒரு சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார் குகேஷ். மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். 2025-ஆம் ஆண்டு நார்வே சதுரங்கப் போட்டியின் 06-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்ற முதல் வெற்றி அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. எதிர்காலப் பயணத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi congratulates Kukesh for defeating Carlsen in Norway Classical International Chess Tournament


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->