இல்லத்தரசிகளுக்கு இன்பச் செய்தி! சமையல் எண்ணெய் விலை 56% வரை குறைய வாய்ப்பு!
cooking oil price down in soon
சமையல் எண்ணெய் இறக்குமதி வரி 10% குறைக்க மத்திய அரசு எடுத்த முடிவின் பின்புலத்தில், வரும் 15 நாள்களில் சில்லறை விற்பனையில் எண்ணெய் விலை 56% வரை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக 17% உயர்வை கடந்த சில மாதங்களில் கண்டுள்ள சமையல் எண்ணெய் விலை, தற்போது சீரடையும் நிலையிலுள்ளது. இமாமி அக்ரோடெக் நிறுவனத்தின் இயக்குநர் சுதாகர் தேசாய் கூறுகையில், “விலை இரட்டை இலக்கத்திற்குள் சுருங்கும் சாத்தியம் மிக அதிகம். wholesale நிலைமையில் மாற்றம் ஏற்கனவே தொடங்கியுள்ளது” என்றார்.
இந்த வரி குறைப்பு, உள்நாட்டுச் சுத்திகரிப்பு தொழில்களுக்கு ஊக்கம் தரும் எனக் கூறப்படும் நிலையில், கடுகு எண்ணெய் மற்றும் பல வகை எண்ணெய்களின் சந்தை அழுத்தம் காரணமாக 34% வரை விலை சரிவும் சாத்தியமுள்ளதாகவும் தேசாய் தெரிவித்தார்.
கச்சா எண்ணெயின் வரி 22.5% ஆக உயர்ந்த நிலையில், தற்போது வழங்கப்பட்ட 10% வரி சலுகை நிறுவனங்களுக்குப் பெரும் நன்மை தரும் என ஹால்டர் வென்ச்சர் நிறுவன இயக்குநர் கேஷப் குமார் கூறியுள்ளார்.
சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் உள்ளிட்ட எண்ணெய்களின் விலை படிப்படியாகக் குறையும் எனவும் கூறப்படுகிறது.
English Summary
cooking oil price down in soon