மோதிரம் உனக்கு., கட்டில் எனக்கு., திமுகவின் அடேங்கேப்பா தேர்தல் அறிக்கை.! - Seithipunal
Seithipunal


வன்னியர், அகமுடையார், மறவர், கள்ளர், செட்டியார், நாடார், வெள்ளாளர், கொங்கு கவுண்டர், முதலியார், பிராமின், விஸ்வ கர்மா உள்ளிட்ட சாதிகளை அடக்கிய MBC, BC பிரிவுகளை சேர்ந்த பெண், ஆண்களை, பட்டியல் இனத்தவர்கள் (சாதியினர்) திருமணம் செய்து கொண்டால் ரூ.60 ஆயிரம், ரூ.3 லட்சம், ரூ.10 லட்சம் பரிசும், தாலிக்கு ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படும் என்று, திமுக -காங்கிரஸ் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.

இதற்கு பல்வேறு சாதி அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையான தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட பிரிவிலேயே ஒரு சாதியை விட்டு மற்றொரு சாதிக்கு பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்கள் என்ற நிலையில், இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை தூண்டும் விதமாக இதுபோன்ற ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருப்பது சமூகத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஃபார்வர்டு பிளாக் கட்சிகள் இதற்க்கு ஆதரவு தருவார்களா என்று கேட்டு சொல்லுங்கள்., இவ்வளவு ஏன்., விசிக.,காவின் கொடியை கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சுமந்து செல்லுமா என்று திமுக தலைவரை கேட்டு சொல்லுங்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு மாற்று சாதி பெண்களை தேடி தேடி காதல் வலைவீசி திருமணம் செய்தால், அவர்களின் எதிர்காலமும், தமிழகத்தின் முன்னேற்றமும் பாதிக்கப்படும். இவ்வளவு ஏன்., புஷ்பா புருஷன் திரைப்பட கதையாக., மோதிரம் உனக்கு., கட்டில் எனக்கு என்று திருமணம் முடிந்த கையோடு., பணத்தையும்  & தங்கத்தையும் வாங்கி கொண்டு, நாடக திருமணத்தை நடத்த முடியாதா என்ன? என்று திமுகவுக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk manifesto version 3


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->