திமுக தேர்தல் அறிக்கையில் திடீர் மாற்றம்.! சற்றுமுன் 3 வாக்குறுதிகள் சேர்ப்பு.!
dmk manifesto change
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் நல்ல நேரம் பார்த்து சரியாக 12.30 மணிக்கு வெளியிட்டார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், முக்கியமாக விவசாய கடன், கல்வி கடன், சிலின்டர் மானியம், கொரோனா நிவாரணம் உள்ளிட்ட அறிவிப்புகளும், மொத்தமாக 500 வாக்குறுதிகளும் இடம்பெற்றன.

இந்நிலையில், திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள் செய்து முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி,
*சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது என வாக்குறுதி 43ல் சேர்ப்பு
*சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை நிராகரிக்கப்படும்
* காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்படாது உள்ளிட்ட 3 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.