திமுகவில் இப்படி ஒரு எம்பியா? அலறவிட்ட புதுமுக எம்பி! அலண்டு போயுள்ள நிர்வாகிகள்!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 37 இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் பலர் வாரிசு வேட்பாளர்கள் ஆகும். சில இடங்களில் மூத்த நிர்வாகிகள், சில இடங்களில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், அந்த பகுதியில் இருந்த கட்சியின் மாவட்ட செயலாளர் உட்பட நிர்வாகிகளுக்கே யார் என்றே தெரியாத அளவிலே, வேட்பாளர்களை எல்லாம் திமுக அறிவித்திருந்தது. 

அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஒரு வேட்பாளர் தான் கடலூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற ரமேஷ் என்பவர். கடலூர் தொகுதியில், சிறுபான்மையாக வசிக்கும் சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொழுது, அங்கே இருந்த திமுக நிர்வாகிகளுக்கு அவரை யாரென்றே தெரியவில்லை. மேலும் அவருடைய அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய, கடலூர் மாவட்ட திமுக மூத்த நிர்வாகியும்,  தற்போது மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான இள புகழேந்தி, வேட்பாளர் யார் என்று தெரியவில்லை, ஆனாலும் நாம் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தான் அறிமுகப்படுத்தியிருந்தார். 

இதனிடையே அவர் வெற்றி பெற்று தற்போது மக்களவை உறுப்பினராகவும் தேர்வாகிவிட்டார். இந்நிலையில் நெய்வேலி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அலுவலகத்தில் நெய்வேலி தொமுச பொருளாளர் குருநாதன் அவர்களுடைய தாயார் மறைவையொட்டி நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திமுகவின் மாவட்ட செயலாளரும், திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வே கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். 

அப்போது அங்கு பேசிய திமுக நிர்வாகிகள், மக்களவைத் தேர்தலின் பொழுது எங்களுக்கு சரியான முறையில் செலவுக்கு பணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டினை வைத்திருந்தார்கள். மேலும் எம்பியை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அழைத்தால் திரும்ப கூப்பிடுவது இல்லை என்றும், எங்களை மதிக்க வில்லை எனவும், குறிப்பாக விருத்தாசலம், பண்ருட்டி தொகுதிகளில் செலவு கணக்குகளில் பாரபட்சம் காட்டப் பட்டதாகவும் குற்றச்சாட்டுகளை வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். 

இதனையடுத்து மைக்கை பிடித்த எம்பி ரமேஷ், நான் அதிகம் பேசாதவன். நான் கட்சிக்கு புதியவன் என் தொழிலை விட்டுவிட்டு நான் முழு நேர அரசியலுக்கு வந்து இருக்கிறேன். நான் எப்பொழுதும் தளபதியுடன், உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் பொழுது உங்கள் போனை எப்படி எடுத்து பேச முடியும் எனவும், ஆனால் நான் பழகுவதற்கு அன்பானவன், என்னிடம் நேராக வந்து பழகிப் பாருங்கள். நான் நல்ல முறையில் பழகுவேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் எனக்கு உதயநிதி மற்றும் அன்பில் மகேஷுடன் வியாபார ரீதியான உறவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் இங்கு இருக்கும் மூத்த நிர்வாகிகளே, இன்னும் திமுக தலைமையை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கும் பொழுது, இப்பொழுது வந்த இவர் எப்படி தொடர்பில் இருக்கிறார்? இவரால் தங்களுடைய பொறுப்புகளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள். 

கடலூர் மாவட்டம் என்றாலே திமுகவிற்கு MRK பன்னீர்செல்வம் என்ற பெயர் தான் நினைவுக்கு வரும். அவரை அதிகாரத்தை விட்டு கீழிறக்க தான், அந்த மாவட்டம் தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டு கணேசன் தலைமையில் மேற்கு மாவட்டம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைமைக்கு நெருக்கமான எம்பி என்பதால் தங்கள் பதவிக்கு எப்பொழுது ஆபத்து வருமோ என்ற பீதியில், திமுக நிர்வாகிகள் இருக்கிறார்கள். திமுகவின் கட்சி கொள்கையின்படி சமூக நீதி எல்லாத்தையும் தாண்டி, அவர்களுக்கான நீதி என்ற ஒன்று உள்ளது . அதன்படி எங்கே பெரும்பான்மையாக யார் வாழ்கிறார்களோ அவர்களை புறக்கணித்து, அவர்களின் அதிகாரத்தை பிடிங்கி, அங்கே சிறுபான்மையாக வசிக்கும் சமூகத்தில் இருப்பவர்களை முன்னிலைப்படுத்தி வருகிறது. இதன்மூலம் கோஷ்டி மோதல் உருவாவது தவிர்க்கப்படுகிறது. 

தற்போது 63 மாவட்டச் செயலாளர்களில் ஒரே ஒரு மாவட்ட செயலாளர் தான் பெரும்பான்மையாக தமிழகத்தில் வசிக்கும் தலித் வகுப்பைச் சார்ந்தவர். அவர்தான் கடலூர் மேற்கு மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக இருக்கும் கணேசன். தற்போது அவரையும் நீக்கிவிட்டு சிறுபான்மையாக வசிக்கும் சமூகத்தில் இருந்து வந்துள்ள கடலூர் எம்பிக்கு அந்த வாய்ப்பு  கொடுக்கப்படுமோ என்ற அச்சத்தில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக உள்ளது.

English Summary

Cuddalore DMK MP Ramesh


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal