திமுக - இந்திய கம்னியூஸ்ட் தொகுதி பங்கீடு., சொல்லும் அளவுக்கு ஒன்னும் இல்லை.! பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunalநடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளை ஒதுக்கியும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியும் திமுக ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டுள்ளது.

காங்கிரஸ், கம்னியூஸ்ட், மதிமுக, விசிக-வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த நான்கு கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையும் சுமுகமாக நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் திமுகவுடன் முதல்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டுஅண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வரும்போது தலையை நிமிர்த்தாமல் கவலையுடன் வந்தார். செய்தியர்களையும் சந்திக்காமல் புறப்பட்டார்.

இந்நிலையில், திமுகவுடன் முதல்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு, அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்த இந்திய கம்னியூஸ்ட் கட்சி குழு செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "முதல்கட்டமாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். 

எங்கள் கருத்துக்களை நாங்கள் சொன்னோம், அவர்கள் கருத்தை அவர்கள் சொன்னார்கள், செய்தியாளர்களிடம் சொல்லும் அளவுக்கு இன்னும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. விரைவில் முடிவெடுத்து அறிவிப்போம்" என்று தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPI Alliance dmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal