தோல் பொலிவின் ரகசியத்தை பகிர்ந்த நடிகை சமந்தா – அடடே இதுதான் சீக்ரெட்டா?.. இதை பாருங்க! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் இருந்து இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உயர்ந்தவர் சமந்தா. தனது திரை வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், எப்போதும் தனது தோற்றம் மற்றும் தோல் பராமரிப்பில் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருபவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், தனது தோல் பொலிவின் ரகசியத்தை சமந்தா தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

இளம் வயதில் சினிமாவுக்குள் நுழைந்த சமந்தா, அடுத்த கட்ட நடிகையாக வளர்ந்த காலம், முன்னணி நாயகியாக வலம் வந்த காலம் என தனது ஒவ்வொரு கட்டத்திலும் அழகுப் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளார். பல விளம்பரங்களில் நடித்தாலும், சரும பராமரிப்பை அவர் எப்போதும் ஒரு முக்கிய விஷயமாகவே கருதி வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், முகம் முதல் உடல் முழுவதும் தோல் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க என்னென்ன செய்கிறார் என்பதைக் காட்டியுள்ளார். அது ஒரு சாதாரண அழகு பராமரிப்பாக இல்லாமல், முறையான சிகிச்சை போல தன்னைத் தானே கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவுடன் அவர் பகிர்ந்துள்ள கேப்ஷன் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. “இந்த ஆண்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று. என் சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க நான் எடுத்த முயற்சிகள் காலப்போக்கில் ஒரு சிகிச்சையாக மாறிவிட்டது. EXION RF சருமத்தை உறுதியாகவும், நீரேற்றத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. Aquagold உடனடி பளபளப்பை தருகிறது. Biologique Recherche Remodeling முகத்தை பிரகாசமாக மாற்றி, சருமத்தை புதுப்பிக்கிறது” என சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த வீடியோவும், அவர் பகிர்ந்த தோல் பராமரிப்பு ரகசியங்களும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Samantha shares the secret to glowing skin Oh my is this the secret Watch this


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->