தவெகவா? திமுகவா? ஓபிஎஸ் கொடுத்த 2 ஆப்ஷன்கள்! ஓபிஎஸ் முகாமில் பெரும்பான்மை ஆதரவு இவங்களுத்தான்!இறுதியில் எடுக்கப்பட்ட ஷாக் முடிவு!
Tvk DMK The 2 options given by OPS These are the ones who have the majority support in the OPS camp The shock decision taken in the end
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், யாருடன் கூட்டணி அமைப்பது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், அதிமுகவுடன் மீண்டும் இணைவது தொடர்பாக விரிவான விவாதம் நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் இனி எந்தவிதமான இணைப்பும் வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற இந்த சந்திப்பில், அதிமுகவுடன் மீண்டும் இணையலாமா, அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா, தவெக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைக்கலாமா என பல்வேறு அரசியல் விருப்பங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், எடப்பாடி பழனிசாமி சமரசத்துக்கு தயாராக இல்லை என்பதால், அதிமுக ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை என தீர்மானிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்களிடம் யாருடன் கூட்டணி அமைக்க விரும்புகிறீர்கள் என்று கருத்துக் கேட்கப்பட்ட போது, இரண்டு தேர்வுகள் மட்டும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, தவெக அல்லது திமுக என்ற இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டதில், பெரும்பாலான நிர்வாகிகள் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதே சரியானது என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நிர்வாகிகள் மட்டுமே திமுகவுடன் கூட்டணி அமைப்பதை ஆதரித்துள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தவெக உடன் இணைவதை ஆதரித்ததாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்களை கைவிட்ட நிலையில், குறைந்த தொகுதிகளுக்காக மீண்டும் அங்கு செல்வது சுயமரியாதைக்கு உகந்ததல்ல என்றும் அவர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. சுமார் 15 சதவீத நிர்வாகிகள் மட்டும் திமுகவுடன் கூட்டணி அமைப்பதே அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் வரை அதிமுகவுடன் எந்தவிதமான இணைப்புக்கும் வாய்ப்பில்லை என்று கடுமையாக விமர்சித்தார். இனி எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதே இலக்கு என்றும் அவர் கூறினார். இதேபோல் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையில் அதிமுக பல தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கே தள்ளப்பட்டதை நினைவூட்டினார்.
இறுதியாக பேசிய ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, பொங்கல் முடிந்த பிறகு திமுகவுடன் கூட்டணியா அல்லது தவெக உடன் கூட்டணியா என்பது குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும், அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தனது வழக்கமான வார்த்தைகளுடன் அவர் உரையை முடித்தார்.
English Summary
Tvk DMK The 2 options given by OPS These are the ones who have the majority support in the OPS camp The shock decision taken in the end