நடிகை சரண்யா பொன் வண்ணனின் இளைய மகள் சாந்தினிக்கு நிச்சயதார்த்தம் – சரண்யா மகளுடன் செம டான்ஸ்!
Actress Saranya Pon Vannan younger daughter Chandini gets engaged Saranya dances beautifully with her daughter
நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சரண்யா பொன் வண்ணன், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 1995ஆம் ஆண்டு நடிகர் பொன் வண்ணனை திருமணம் செய்துகொண்ட அவர், சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு ஜீவா நடித்த ராம் படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய சரண்யா, தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், கிரீடம், விஐபி, களவாணி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரமாக நடித்துப் பாராட்டைப் பெற்றார். இன்று தமிழ் சினிமாவில் “அம்மா” என்றாலே சரண்யா பொன் வண்ணன் என்ற பெயர் நினைவுக்கு வரும் அளவிற்கு அவர் தனித்துவம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சரண்யா பொன் வண்ணனின் இளைய மகள் சாந்தினிக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஊட்டியில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. சாந்தினி ஒரு மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவரது வருங்கால கணவர் டானின் என்பவருடன் நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சரண்யா அல்லது பொன் வண்ணன் நேரடியாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிரவில்லை என்றாலும், மேக்கப் கலைஞர் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் வெளியான சில படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில், மகளின் நிச்சயதார்த்த மகிழ்ச்சியில் சரண்யா பொன் வண்ணன் உற்சாகமாகக் கொண்டாடும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த குடும்ப நிமிடங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
English Summary
Actress Saranya Pon Vannan younger daughter Chandini gets engaged Saranya dances beautifully with her daughter