இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம்; பென்டகன் அறிக்கை..!
A Pentagon report suggests that a conflict between India and China could occur again
நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெமா வாங்ஜாம் தாங்டாக் என்பவர், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி ஜப்பானுக்கு செல்லும் வழியில், அவர் சென்ற விமானம் ஓய்வுக்காக சீனாவில் நிறுத்தப்பட்டது.
அப்போது, அவரது பாஸ்போர்ட்டை பறித்த சீன குடியேற்ற அதிகாரிகள், அருணாச்சல பிரதேசத்தில் பிறந்ததால் பாஸ்போர்ட் செல்லாது என்றும், அருணாச்சல பிரதேசம் சீனாவைச் சேர்ந்த பகுதி என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு இந்திய தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க காங்கிரஸிடம் பென்டகன் சமர்பித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
2049-ஆம் ஆண்டுக்குள் சிறந்த நிலையை அடைய அருணாச்சலப் பிரதேசம், தைவான் மற்றும் தென் சீனக் கடலில் உள்ள பிற பிராந்தியங்கள் மிகவும் முக்கியம் என்று சீனா முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்காக ஒரு சர்வதேச உயர்மட்டக் குழுவையும், பலமான ராணுவ கட்டமைப்பை உருவாக்குவதை சீனா நோக்கமாக கொண்டிருக்கிறதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பதட்டத்தை தணிப்பது என்பது சீனாவின் நீண்டகால இரட்டை உத்தியின் ஒரு பகுதி என்றும், சீனா அதன் நட்பு நாடான பாகிஸ்தானைப் போல, ராணுவத்தின் மூலம் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால், இனி வரும் ஆண்டுகளில் இந்தியா - சீனா இடையிலான உறவில் மோதல் ஏற்படலாம், என பென்டகன் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
English Summary
A Pentagon report suggests that a conflict between India and China could occur again