வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் 17 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பியுள்ளார்..! - Seithipunal
Seithipunal


நமது அண்டைய நாடான வங்கதேசத்துக்கு வரும் பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வங்கதேச தேசியவாத கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, 80, மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால், கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், நாட்டை விட்டு வெளியேறி, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசித்து வருகிறார்.

அவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 17 ஆண்டுக்குப் பின், இன்று (டிசம்பர் 25) மனைவி ஜூபைதா ரஹ்மான், மகள் ஜைமா ரஹ்மான் ஆகியோருடன் லண்டனில் இருந்து வங்கதேச ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டாக்கா வந்தடைந்துள்ளார். 

அவரை விமான நிலையத்தில், கட்சித் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத காரில் தாரிக் ரஹ்மான் அழைத்து செல்லப்பட்டார். சாலையின் இருபுறத்திலும் நின்று கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள பொது தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The son of former Bangladeshi Prime Minister Khaleda Zia has returned to the country after 17 years


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->