No Posts, No Likes: ராணுவ வீரர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு; இந்திய ராணுவம் நெறிமுறை..! - Seithipunal
Seithipunal


பேஸ்புக், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்ககளை பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை இந்திய ராணுவம் விதித்துள்ளது.

சமூக ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தும் இந்திய வீரர்களுக்கு இந்திய ராணுவம் அவ்வபோது விதிமுறைகளை வகுத்து வருகிறது. வெளிநாட்டு உளவு அமைப்புகளிடம் தகவல்களை கசிய விடக்கூடாது என்பதற்காக அவ்வபோது ராவு வீரர்களுக்கு விதிமுறைகள் மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் இந்திய ராணுவம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தகவல்களை தெரிந்து கொள்ள இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பதிவுகளை பார்க்கலாம் என்றும், அதில், பதிவுகள் வெளியிடுவது, கருத்து பதிவேற்றம் செய்வது, பதிவுகளை பகிர்வது, விருப்பம் தெரிவிப்பது அல்லது செய்தி அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், எக்ஸ், யூடியூப், மற்றும் குவாரா ஆகிய சமூகஊடகங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்கைப், வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய செயலிகள் மூலம் பொதுவான தகவல்களை பரிமாறி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, தெரிந்த நபர்களுடன் மட்டுமே தகவல்களை பரிமாறி கொள்ளலாம். தகவல்களை பெறுபவர் யார் என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், லிங்க்ட் இன் இணையதளத்தில் வேலைவாய்ப்பு குறித்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று இராணுவத்தினருக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Indian Army has imposed restrictions on military personnel using social media


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->